scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 20, 2013

இன்னும் என்ன செய்ய போகிறோம் இந்த சின்ன இதயங்களுக்கு …?



இன்னும் என்ன செய்ய போகிறோம் இந்த சின்ன இதயங்களுக்கு ...??கல்வியின் ஆர்வம் / தாக்கம் மாணவர்களிடம் பெருகியிருக்கிறதோ இல்லையோ … பெற்றோர்களிடம் நிறைய பெருகியிருக்கிறது . ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும் முன்பு பெற்றோர் படுகிற வேதனை மிக கடுமையானது என்றால் அது மிகையல்ல . எப்படியாவது தான் சாதிக்க முடியாததை தன் பிள்ளைகள் சாதித்து விட வேண்டும் என்று அவர்கள் எடுக்கிற பிரயாசங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல . ஆனால் நன்மைக்காக எடுக்கப்படுகிற அந்த பிரயாசங்கள் எங்கோ ஒரு மூலையில் சின்ன உள்ளங்களை வேதனை படுத்துகிறது என்பது பல மடங்கு உண்மை .

அதிகாலையிலே பிள்ளைகள் தட்டி எழுப்பப்பட்டு படிக்க வைக்கப்படுகிறார்கள் . சரியான தூக்கம் இல்லாமல் தவிக்கும் பிள்ளைகள் தூங்கவும் முடியாமல் படிக்கவும் முடியாமல் திணறுவதை கவனிக்க பெற்றோருக்கு முடிவதில்லை . கொஞ்சம் பெரிய பிள்ளைகள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் டியூஷன் அனுப்பப்படுகிறார்கள் .
அதிகாலை படிப்பை முடித்து தன்னுடைய எடையை போல எடையை கூலிகள் போல பிள்ளைகள் தூக்கி கொண்டு போவதை பெற்றோர்கள் பெருமையாக பார்த்து கொண்டிருக்க பிள்ளைகளின் முதுகு சுமையினால் நிறைந்து வேதனை தருகிறதையும் யாரும் கவனிப்பதில்லை .
சாயங்காலம் வரை பள்ளியில் பாடம் படித்து வீட்டிற்கு களைத்து வரும் பிள்ளைகள் பேசக்கூட நேரம் இல்லாமல் ஒரு காபி குடித்துவிட்டு டியூஷன் அனுப்ப இல்லை துரத்தப்படுகிறார்கள் .
இரவு எட்டு மணிக்கு திரும்பும் பிள்ளைகள் உணவிற்கு பின்பும் படிக்கும் படி அறிவுறுத்த / வற்புறுத்த படுகிறார்கள் . கொடுமை தாங்காமல் புத்தகத்தை எடுக்கும் பிள்ளைகள் அப்படியே தூங்குவதும் நாம் பல இடங்களில் காணலாம.
மீண்டும் காலை 5 மணி .. எல்லாம் சரி தான் . விடுமுறை நாட்களிலாவது கொஞ்சம் ஓய்வு என்றால் அன்றும் சிறப்பு வகுப்புகள் மற்றும் கணிப்பொறி பயிற்சி மற்றும் பிற …இவை எல்லாம் செய்து முடிக்க பெற்றோர் எடுக்கும் முயற்சிகளும் அவர்கள் செலவழிக்கும் பணமும் எப்படியாவது தன் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று தான் எண்ணப்படுகின்றன . ஆனால் சில எதிர்மறையான விளைவுகள் நம் பிள்ளைகள் வாழ்வில் ஏற்ப்படும் என்பதை நாம் மறந்து போக கூடாது .
பெற்றோர் பிள்ளைகளுடன் அமர்ந்து பேசி சிரித்து விளையாடும் நாட்கள் போய் பாடத்தில் இருந்து கேள்வி கேட்கும் நாட்கள் பெருகி உள்ளதால் , பெற்றோரை விட்டு மனதளவில் பிள்ளைகள் பிரிய நேரிடும் .
எப்பொழுதும் படிப்பு படிப்பு என்று இருப்பதால் உடல் நிலையும் , மன நிலையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது
பெற்றோருடன் அதிக நேரம் செலவழிக்க முடியாததால் தான் பிள்ளைகள் வளரும் போது அன்பு , குடும்பம் , விட்டு கொடுத்தல் என்பவைகள் குறித்த அறிவு இல்லாமல் அதிக அளவில் அவர்கள் திருமண வாழ்வில் கூட பிரிவுகள் நேர்கிறது .
எல்லாமே .. என் பிள்ளைக்காக தானே என்று நீங்கள் சொன்னாலும் , உங்கள் பிள்ளை படிப்பில் முதல் இடம் பிடிப்பதை விட வாழ்வில் முதல் இடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள் . இன்னும் என்ன செய்ய போகிறோம் இந்த சின்ன இதயங்களுக்கு …?
படிப்பிற்கு முக்கியம் கொடுங்கள் . தப்பில்லை ஆனால் அதைவிட உங்கள் பிள்ளைகளின் உணர்வுக்கு முக்கியம் கொடுங்கள் . ஏன் எனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு …

No comments:

Post a Comment