scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

November 24, 2013

கோடிக்கணக்கான உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்பின் மறு உருவமான அன்னை தெரசா.

 நான்காம் வகுப்பு ஆங்கிலப் பாடம் MOTHER TERESA- PEACE ON EARTH திற்காக பயன்படுத்தலாம்.

இரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டோம், மூன்றாவது உலகப்போர் நிகழ்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல. அன்பும் நேசமும், பாசமும் கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர், இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா.

1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை விளங்கும் என்பது அதன் பெற்றோருக்கு அப்போது தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவலாயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக்கொண்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந்தேதி தனது 19 ஆவது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரசா.
அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண் சுமார் 17 ஆண்டுகள் லொரட்டா கன்னிமார்களின் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் வாழ்ந்தோரின் நிலையையும் ஆதரவின்றி மாண்டோரின் நிலைமையும் அன்னை மனத்தை பிழிந்தன 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ந்தேதி ஓய்வுக்காக இந்தியாவின் ஜார்ஜிலிங் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார்.

நலிந்தோருக்கும் நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக்கொண்டு லொரட்டா கன்னிமார்களின் குழுவிலிருந்து அவர் விலகினார். கல்கத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் வந்து சேர்ந்தார் அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்புதான் கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரசா 1950ல் 'Missionaries of Charity' என்ற அமைப்பை உருவாக்கினார்.

1952ல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம் சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர் ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவனைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர்.

ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா? கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும், என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்கு முக்காடிப்போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து கதறி அழுது வாரி வழங்கினார்.

1953ல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957ல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா. பலர் அருவறுத்து ஒதுங்கும்போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயங்களுக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது 'Missionaries of Charity' அமைப்பு  தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன.

1979ல் அமைதிக்கான “நோபல் பரிசு” 1980 ல் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம். அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ந்தேதி  அவரது 87 ஆவது வயதில் நின்றபோது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன. தாம் வாழ்ந்தபோது அவரிடம் இருந்த சொத்தெல்லாம் 3 வெள்ளைச்சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெப மாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அன்னையை....
"சாக்கடையோரச் சந்ததிக்கும் 
சாமரம் வீசிய பூமரம்" 

என்று வருனித்தார். அன்பிற்கு அன்னை தெரசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரசா போன்றவர்களை எண்ணித்தான் “நல்லார் ஒருவர் உளறேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற பாடலை அவ்வையார் எழுதியிருக்க வேண்டும். 

நாம் அன்னை தெரசா போல் சக மனிதரை நேசிக்கும் மனிதநேயத்தை உடல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை, நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோர்களிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடமும், அன்றாடம் நாம் சந்திப்பவர்களிடமும், நமக்கு அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும். 

No comments:

Post a Comment