scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

January 02, 2014

பிளஸ் 2 தேர்வர்கள் பட்டியல் : தலைமை ஆசிரியர்களுக்கு 12 கட்டளைகள்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் பெயர் பட்டியலை சரிபார்த்து, ஆன்லைனில் திருத்தம் செய்வதற்கு நாளை (ஜன.3ம் தேதி) வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட பள்ளிகள் சார்பில் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்து தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் பெயர் பட்டியலில் முக்கிய திருத்தங்கள் செய்வதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் ஜன.3ம் தேதி மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பட்டியலை சரிபார்ப்பதில் முக்கிய வழிமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:

*பள்ளியின் செக் லிஸ்டில் அனைத்து தேர்வர்களின் பெயர்களும், அச்செழுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

*பெயர் விடுபட்டிருந்தால் கடைசி பக்கத்தில் சிவப்புநிற மையால் தெளிவாக எழுத வேண்டும்.

*தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, இதர பாடங்களில் தேர்வு எழுத உள்ள மொழி ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.*தவறு இருந்தால் சிவப்பு நிற மையால் சுழித்து சரியான விபரத்தை குறிப்பிட வேண்டும்.

*தேர்வர்களின் குரூப் கோடு மற்றும் சப்ஜெக்ட் கோடு வரிசையாக உள்ளதா? என்பதை சரிபார்த்து தவறு இருந்தால் சிவப்பு நிற மையால் சுழித்து சரியான விபரத்தை அருகில் எழுத வேண்டும்.

*பள்ளியின் எண், பெயர் ஆகியவை சரியாக அச்செழுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து தவறு இருந்தால் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

*டைப்ரைட்டிங் பாடத்தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மொழி, தமிழ் அல்லது ஆங்கிலம் என்று சரியாக குறிப்பிட வேண்டும். தவறு இருந்தால் உரிய திருத்தம் மேற்கொள்ளவேண்டும்.

*இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் வினாத்தாள்கள் வழங்கப்படும் என்பதையும், இதர பாடங்களுக்கு கிடையாது என்பதைக் கருத்தில் கொண்டு செக் லிஸ்டை கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும்.

*இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் தங்களது நேரடி கவனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

*தலைமை ஆசிரியர்கள் நேரடியாக சரிபார்க்காமல் கையெழுத்து போடக்கூடாது. அவ்வாறு கையெழுத்திட்டால் அதன்பின் விளைவுகளையும் முழு பொறுப்பையும் தலைமை ஆசிரியர்களே சந்திக்க நேரிடும்.

*ஒரே பெயர் மற்றும் தலைப்பு எழுத்து கொண்ட மாணவ, மாணவிகள் ஒன்றுக்கு மேற்பட்டுஇருந்தால் அந்தந்த மாணவ, மாணவிகளின் பிறந்த தேதியை மிக கவனத்துடன் சரிபார்க்க வேண்டும்.

*இந்த திருத்தங்களை ஜன.3ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் ஆன் லைனில் செய்து, தேர்வர்களின் நலன் பாதிக்காத வகையில் தேர்வு பணிகளை செம்மையாகவும், சிறப்பாகவும் மேற்கொண்டு தேர்வு முடிவுகளை நல்ல முறையில் வெளியிட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment