scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 10, 2014

10ம் வகுப்பு தேர்வு முடிந்தது : இன்று முதல் விடைத்தாள் திருத்தம்

கடந்த 15 நாட்களாக நடந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. 11552 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவர்கள் எழுதினர்.தனித் தேர்வர்கள் 74 ஆயிரத்து 647 பேரும் எழுதியுள்ளனர். நேற்றுடன் இந்த தேர்வுகள் முடிந்தன. என்றும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு நேரம் காலை 10 மணிக்கு பதிலாக, காலை 9.15 மணிக்கு தொடங்கின.

மேலும், 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்கப்பட்டது. விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் மாணவர்களின் போட்டோ, பதிவு எண், தேர்வு எழுத உள்ள பாடம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டது. விடைத்தாள் திருத்துவதற்கு வசதியாக விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் ரகசிய குறியீடுகள், மதிப்பெண் விவரங்கள் பதிவு செய்ய மூன்று பிரிவுகள் கொண்டவையாக அச்சிடப்பட்டுள்ளன. கேள்வித்தாள் படித்து பார்க்க 10 நிமிடம், விடைத்தாளில் விவரங்கள் சரிபார்க்க 5 நிமிடம் என மொத்தம் 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.
ஒவ்வொரு நாள் நடக்கும் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் அனைத்தும் தேர்வு எழுதும் மாணவர்கள் முன்பு பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. அப்போது மாணவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது. தமிழ் வ ழியில் படித்து தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 7 லட்சத்து 31 ஆயிரத்து 430 மாணவ மாணவியருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அச்சிட்டு வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு சென்னை புழல் சிறைக் கைதிகள் 45 பேரும், திருச்சி மத்திய சிறைக் கைதிகள் 74 பேரும் தேர்வு எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு பெரும்பாலும் குழப்பங்கள், குளறுபடிகள் தவிர்க்கப்பட்டு இருந்தாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம் நடந்துள்ளதாக புகார் வந்தது. இதன் பேரில் தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், 7ம் தேதி நடந்த அறிவியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 14, 29ம் கேள்விகளுக்கான விடைகள் குழப்பமாக கேட்கப்பட்டன.
அதேபோல இரு மதிப்பெண் கேள்விகளில் 6, 21 வது கேள்விகளும் குழப்பமாக கேட்கப்பட்டது. இதனால் மொத்தம் 6 மதிப்பெண்களை மாணவர்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை எழுத முயற்சி செய்திருந்தால் அவர்களுக்கு முழு மதிப்பெண்களை தேர்வுத் துறை வழங்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த இரண்டு குழப்பங்கள் தவிர பத்தாம் வகுப்பு தேர்வு இனிதே முடிந்தது. மாணவர்கள் உற்சாகத்துடன் நேற்று மதியம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

No comments:

Post a Comment