scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

May 10, 2015

எம்.பி.பி.எஸ்.: நாளை முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 11) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பிளஸ் 2 படிப்பில் உயிரியல்- இயற்பியல்- வேதியியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ப்பதற்கு விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது. சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. வேண்டுகோள் கடிதம்: எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தைப் பெற, வேண்டுகோள் கடிதத்துடன் 'Secretary, Selection Committee, Kilpauk, Chennai' என்ற பெயரில் விண்ணப்பக் கட்டணமான ரூ. 500-க்கு வரைவுக் காசோலை ஆகியவற்றை அளிப்பது அவசியமாகும். இணையதளம் வாயிலாக: சுகாதாரத் துறையின் இணையதளம்www.tnhealth.orgமூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விநியோகம் தொடங்கும் திங்கள்கிழமையன்று (மே 11) பகல் 12 மணிமுதல் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்- மாற்றுத் திறனாளிகள்- முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் படிவங்கள் ஏற்கெனவே சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மே 28-ஆம் தேதி வரை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்துசேர, வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். தரவரிசைப் பட்டியல் எப்போது? கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் பி.இ. கலந்தாய்வுக்கு முன்னதாக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெற உள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 15-ஆம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது. ஜூன் மாதம் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment