scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label B.Ed. Show all posts
Showing posts with label B.Ed. Show all posts

January 08, 2015

பாரதியார் பல்கலை: பி.எட்., தொலைநிலை படிப்புக்கு சேர்க்கை

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2015ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடம் இளங்கலை, முதுகலை அல்லது அரசு/தனியார் பள்ளிகளில் முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதியாக இளங்கலையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பது அவசியம். பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500க்கான வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை பாராதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிப்.,28க்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். நுழைவுத்தேர்வு மார்ச் 29ல் நடைபெறுகிறது. கூடுதல் விவரங்கள் அறிய பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

November 25, 2014

பாரதியார் பல்கலை: இளங்கலை கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில்  2015-2017ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் பல்வேறு துறைகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி:

இளங்கலை அல்லது முதுகலையில் (தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய படிப்பில் ஏதுதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

கையேடு மற்றும் விண்ணப்பங்களை தபால் மூலம் பெற ரூ.500 வரைவோலை அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு மார்ச் 29ல் நடைபெறுகிறது.

விண்ணப்பம் கிடைக்கும் மையங்கள்:

கோவை, சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மையங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

August 13, 2014

IGNOU - ஆக.17ல் நுழைவுத் தேர்வு

மதுரை இக்னோ மண்டல மைய இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளதாவது: இக்னோவின் 2015ம் ஆண்டு எம்.பி.ஏ., எம்.எட்., மற்றும் பி.எட்., சேர்க்கைக்கான நுழைவு தேர்வு ஆக.,17 ல் நடக்கிறது.மதுரை மண்டலத்தில் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, சாத்துார், தேவகோட்டை,
உத்தமபாளையம், ராமநாதபுரம் ஆகிய 10 மையங்களில் 4,800 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கான நுழைவு சீட்டு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இக்னோவின் இணையதளம் மூலம் மாணவர் பெயர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 0452- 238 0733 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

August 07, 2014

Flash News:IGNOU -Hall Ticket forB.Ed & M.Ed Entrance Exam Published

B.Ed & M.Ed Entrance Exam Published


Entrance Exam on 17 th August 2014 (2pm to 4 pm)

Download Hall Ticket in www.ignou.ac.in

August 02, 2014

பி.எட் தேர்வு முடிவுகள் வெளியீடு.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைத்தின் பி.எட். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு. பி.எட். தேர்வு முடிவுகளை www.tnteu.in என்ற இணையதளத்தில் காணலாம்.

July 27, 2014

எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 கடைசி நாள்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் முதுகலை கல்வியியல் (எம்.எட்) படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஜூன் 30-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பி.எட். பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று, 2 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மட்டுமே இப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள்.

பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையம், உறுப்புக் கல்லூரிகள், அனைத்துப் பயிற்சி மையங்கள், படிப்பு மையங்களில் ரூ.500-க்கான வங்கி வரைவோலையை அளித்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்களை பல்கலைக்கழக வலைதளத்தின் http://www.bdu.ac.in/cde_admission.php மூலம் பதிவிறக்கம் செய்து கொள்பவர்கள் ரூ.500-க்கான வங்கி வரைவோலையையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் அளிக்கலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி கடைசிநாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு 0431-2407027,28,54.

July 18, 2014

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகள் 21 உள்ளன. 649 சுயநிதி பி.எட். கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 2 ஆயிரத்து400 பி.எட். இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு மட்டும் ஒற்றைச் சாளற முறையில் கலந்தாய்வு நடத்தி மாணவ–மாணவிகளை சேர்க்க உள்ளோம். இந்த கலந்தாய்வு முதல் முதலாக பல்கலைக்கழகம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.பி.எட். படிக்க விரும்பும் மாணவ–மாணவிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 19–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 29 மையங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 3 மையங்கள் ஏற்படுத்தி அவற்றில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம்ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதுபோல தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தர்மபுரியில் உள்ள மையத்தில் விண்ணப்பிக்கலாம். மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையத்தை நாடலாம்.இது பற்றிய முழுவிவரமும் இணையதளத்தில் (www.onlinetn.com) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 19–ந்தேதி தான் செயல்படத் தொடங்கும். அன்று விவரங்களை அறிந்து கொள்ளலாம். 28–ந்தேதி கடைசி நாள் விண்ணப்பிக்க மாணவ–மாணவிகள் அந்த மையங்களுக்கு செல்லும்போது, புகைப்படம் வைத்திருந்தால் கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால் உங்களை அதிகாரிகளே புகைப்படம் எடுப்பார்கள்.விண்ணப்பிக்க அத்தனை உதவிகளையும் செய்வார்கள். தப்பாக விண்ணப்பிக்க முடியாத அளவுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம். எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த 29 பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்க 28–ந்தேதி கடைசி நாள்.பல்கலைக்கழக இணைய தள முகவரி www.tntue.in கலந்தாய்வு 28–ந்தேதிக்கு பிறகு 3 அல்லது 4 நாட்கள் கழித்து ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். பாடம் வாரியாக வெளியிடப்பட உள்ளது. பின்னர் ரேங்க் மற்றும் கலந்தாய்வு தேதி அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் எஸ்.எம்.எஸ்.மூலம் அனுப்பப்படும். செல்போன் மற்றும் பி.எஸ்.என்.எல். தரைவழி (லேண்ட் லைன்) தொலைபேசி மூலமும் பேசி தெரிவிக்கப்படும். எம்.எட். படிப்பில் சேர விண்ணப்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். பேட்டியின் போது பல்கலைக்கழக பதிவாளர் கலைச்செல்வன் உடன் இருந்தார்.