scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label JUDGEMENTS. Show all posts
Showing posts with label JUDGEMENTS. Show all posts

December 08, 2013

2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு விடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் வழக்கு விவரம்

2013 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு விடைகளுக்கு எதிராகதொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தின் வழக்கு விவரம்.

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT DATED: 21.11.2013 CORAM

October 20, 2013

ஆசிரியருக்கு வழங்கிய தேர்வு நிலை அந்தஸ்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.


அரசுப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஆசிரியர் அந்தஸ்தை ரத்து செய்த உதவி தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 
சுரேஷ்பாபு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 1989-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன்.

October 19, 2013

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு நீதிபதி அதனை வருகின்ற 21 தேதிக்கு ஒத்திவைத்தார்




முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.



சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன இவ்வழக்குகள் இன்று ( அக் 18) நீதியரசர் டி எஸ் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.


வழக்கை விசாரித்த நீதிபதி அதனை வருகின்ற 21 தேதிக்கு ஒத்திவைத்தார் அன்றையதினம் மூன்று வழக்குகளும் நீதியரசர் நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக் 21 மாலை வழக்கின் நிலை குறித்து தெரியவரும்.

October 01, 2013

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் எழுத்துத் தேர்வை மீண்டும் நடத்த உத்தரவு


சென்னை: முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் எழுத்துத் தேர்வை மீண்டும் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 40 கேள்விகள் தவறாக இருந்ததையடுத்து தேர்வை மீண்டும் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவு நகல் கிடைத்த 6 வார காலத்திற்குள் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

September 20, 2013

காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தகுதி தேர்வு நடத்தி நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

50 சதவீதம் மதிப்பெண் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் எல்காட் நிறுவனம் நிரப்பியது. இந்த நிலையில், 2006ம் ஆண்டு 1,880
கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதேநேரம் ஏற்கனவே பணியில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அரசு உத்தரவிட்டது.

September 18, 2013

இரட்டைப்பட்டம் விசாரணையில் முன்னேற்றம் நாளை முடிவு தெரியும்

இன்று  ( 18.9.2013)  விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு இரட்டைப்பட்டம் (DOUBLE DEGREE ) சார்பாக வாதிட்ட
வழக்குரைஞர்களின் வாதங்களை நீதியரசர்கள் கேட்டறிந்தனர். 
மேலும் மூன்று வருட வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர் விசாரணை நாளையும்(19.09.2013) தொடர்கிறது. நமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.நாளை இரட்டைப்பட்டம் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.
நன்றி-திரு.கலையரசன் 

August 29, 2013

பள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் : ஐகோர்ட்

கன்னியாகுமரி மாவட்டம் கீழ் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் சூசைமகேஷ். இவர் அங்கிருந்த செயிண்ட் மேரீஸ்தொடக்கப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியராக 2005–ம் ஆண்டில் வேலையில் சேர்ந்தார்.