scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label TNPSC. Show all posts
Showing posts with label TNPSC. Show all posts

August 27, 2014

3,000 இடங்களுக்கான 'குரூப் 4' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்

பல துறைகளில் காலியாக உள்ள, 3,000 இடங்களை நிரப்ப, விரைவில், குரூப் 4 போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர், பாலசுப்ரமணியன் (கூடுதல் பொறுப்பு) தெரிவித்தார்அவர், கூறியதாவது: குரூப் 2: கடந்த ஆண்டு, டிசம்பர், 1ம் தேதி, 1,064 காலி பணியிடங்களை நிரப்ப, குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, 20 நாட்களில் வெளியிடப்படும். கால்நடை பராமரிப்பு துறையில், 686 டாக்டர்கள், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பணியை, நிரந்தரப்படுத்தும் வகையில், விரைவில், சிறப்பு தேர்வு நடத்தப்படும். மேலும், 385 பணியிடங்கள், நேரடியாக நிரப்பப்படும். பல துறைகளில், குரூப் 4 நிலையில் (தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகள்), காலியாக உள்ள, 3,000 இடங்களை நிரப்ப, போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு, 40 நாட்களில் வெளியிடப்படும். உரிமையியல் நீதிபதி பதவியில், 162 பணியிடங்களை நிரப்ப, இன்று (நேற்று), அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. இன்று முதல், வரும் செப்டம்பர், 21ம் தேதி வரை, www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளம் வழியாக, தேர்வுக்கு பதிவு செய்யலாம்.வரும் அக்டோபர், 18 மற்றும் 19ம் தேதிகளில், ஒரு நாளைக்கு, இரு தாள் வீதம், இரு நாளும் சேர்த்து, நான்கு தாள்களுக்கு, தேர்வு நடக்கும். தலா, 100 மதிப்பெண் வீதம், 400 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். பின், 60 மதிப்பெண்ணுக்கு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.பி.எல்., முடித்தவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

June 20, 2014

TNPSC GROUP 2 நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டது

Tnpsc குரூப் 2a தேர்வு- நுழைவுச்சீட்டு வெளியீடு

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 29-ந்தேதி அன்று காலை, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளிலடங்கிய 2846 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது.

இத்தேர்வுக்கென 6.25 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (ரிஜிஸ்ட்ரேசன் ஐ.டி.) உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப்பட்டியலில் (ரிஜிஸ்ட்ரேசன் லிஸ்டு ) கண்டறியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

`நிராகரிப்புப்பட்டியலில் இடம்பெறாத, சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் நகலுடன் கீழ்கண்ட விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு 23-ந் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல் அறியலாம்

விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்ப பதிவு எண். விண்ணப்ப , தேர்வுக் கட்டணம் (ரூபாய்)கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கி, வங்கிக்கிளை அல்லது அஞ்சலக முகவரி:நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

June 18, 2014

TNPSC-PUBLISHED VAO -2014-Tentative Answer Keys


 Sl.No.
Subject Name
 (Date of Examination : 14.06.2014)
VILLAGE ADMINISTRATIVE OFFICER IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE (2013-14)
         1
         2
         3
NOTE: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 24th June 2014 will receive no attention.

June 14, 2014

TNPSC VAO Exam TENTATIVE Answer Key 2014 Download

இன்று நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வு தற்காலிக விடைகள் வெளியிடப்பட்டு உள்ளது. 

May 29, 2014

TNPSC DEO Exam Hall Ticket Now Available

Click Here For DEO EXAM HALL TICKET DOWNLOAD

 
         மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

May 22, 2014

வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்த 9.95 லட்சம் பேரின் விவரம் இணையதளத்தில் வெளியீடு.

வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்த 9.95 லட்சம் பேரின் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணியில் 2,342 காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 17ம் தேதி வெளியிட்டது. அன்றைய தினமே இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. ஏப்ரல் 15ம் தேதிஇரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்ககால அவகாசம் அளிக்கப்பட்டது. தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்ததால், ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். மொத்தத்தில் 2,342 காலி பணியிடங்களுக்கு 9.95 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வுக்கு சரியான முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்தோர் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா நேற்று வெளியிட்ட அறிக்கை:டி.என்.பி.எஸ்.சி. வருகிற 14ம் தேதி முற்பகல் வி.ஏ.ஓ. பதவிக்கான எழுத்து தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு 9.95 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர் விவரம் டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளமானwww.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. விஏஓஅலுவலர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.

May 13, 2014

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.

April 16, 2014

29-06-2014 நடைபெற உள்ள TNPSC Group ii (Non-OT) (1/2014) காலிப்பணியிடங்கள்(577) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

Gr II (Non -Ot )காலிப்பணியிடங்கள் அதிகரிக்கபட்டுள்ளது.
29-06-2014 நடைபெற உள்ள TNPSC Group ii (Non-OT) (1/2014) காலிப்பணியிடங்கள்(577) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. (9/2014)
**29-06-2014 அன்று Gr II தேர்விற்குஏற்கனவேவிண்ணப்பித்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை.விண்ணப்பிக்க தவறியவர்கள் மட்டும் விண்ணபிக்கலாம்.
No of New Vacancies :577
Online Applications : 16-04-14 to 30-04-2014
Exam Date :29-06-2014

April 10, 2014

TNPSC தேர்வுகளுக்காக - இந்திய அரசியல் அமைப்பு

1. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' (குடியரசுத்தலைவர் மாளிகை).
2. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் - "ராஷ்டிரபதி பவன்'
3. புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் குடியரசுத் தலைவர் மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது.
4. ராஷ்டிரபதி பவன் - நான்கு மாடிகள், 340 அறைகள் கொண்டது. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 70 கோடி செங்கல், 30 கோடி கற்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
5. குடியரசுத் தலைவர் மாளிகைக்கான செலவு 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாகும். அந்த காலத்திய இந்திய பண மதிப்பு ரூ.2 கோடி.
6. இங்கிலாந்து வைஸ்ராய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகை - தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை.
7. 1911-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்படுகிறது என்று அறிவித்தவர் - ஜார்ஜ் மன்னன்.
8. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் வைஸ்ராய் - லார்டு இர்வின்(1931.ஜனவரி 23-ல் குடியேறினார்)

March 23, 2014

வி.ஏ.ஓ., தேர்வு வினா முறையில் மாற்றம்; பகுதிகள் கடினமாக இருக்கும் என அச்சம்.

டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள வி.ஏ.ஓ., தேர்வு, புதிய வினாக்கள் முறையால்,கடினமாக இருக்கும் என தேர்வு எழுதுபவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 15. ஜூன் 14 ல் எழுத்துதேர்வு நடக்க உள்ளது.கடந்த காலங்களில் வி.ஏ.ஓ., தேர்வில், 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கில பாடத்திலும், 100 வினாக்கள் பொதுஅறிவு தொடர்பாக கேட்கப்படும். ஆனால், தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள வி.ஏ.ஓ., தேர்வு வினாக்களில், மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுத்தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் 80 வினாக்களும், திறனறி பாடத்தில் 20 வினாக்களும், பொதுஅறிவு பாடத்தில் 75 வினாக்களும், கிராமநிர்வாக அலுவலர் தொடர்பாக 25 வினாக்கள், என, மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்படவுள்ளது.பத்தாம்வகுப்பு படித்துவிட்டு, வி.ஏ.ஓ., தேர்வு எழுதுபவர்கள், பழைய பாடத்திட்டத்தை விட, இந்த புதிய தேர்வு முறை, கடினமாக இருக்கும், என அச்சப்படுகின்றனர். இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சிமைய இயக்குனர் ராமமூர்த்தி கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள புதிய கேள்விமுறை மாற்றம் வரவேற்கதக்கது. வி.ஏ.ஓ., பணி தொடர்பான வினாக்களுக்கு பதிலளிக்க, மாணவர்கள் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். புதிய பாடத்திட்டத்தின்படி, இப்போது இருந்தே படித்தால், தேர்வில் எளிதில் வெற்றிபெறலாம், என்றார்.

March 20, 2014

VAO தேர்வுக்கு உதவும்( வி.ஏ.ஓ பணிகள் ) பற்றிய குறிப்புகள்

Pls click here for VAO Study Material

படித்து பயன்பெறுங்கள் நண்பர்களே
நன்றி திரு.T.ராமகிருஷ்ணன் போடிநாயக்கனூர்

March 16, 2014

TNPSC :மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வு 11 இடத்துக்கு 22,000 பேர் போட்டி.

நேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக 11 காலியிடங்களுக்கு 22ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜூன் 8-ம் தேதி நடக்கிறது.
மெயின் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் 11 பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 11 மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 9 காலியிடங்களும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் களுக்கு 2 காலியிடங்களும் உள்ளன. டி.என்.பி.எஸ்.சி. தகவல் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற் கான கடைசி தேதி கடந்த 12-ம் தேதியுடன் முடிவடைந்தது. டி.இ.ஓ. தேர்வுக்கு சுமார் 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார்.11 காலியிடங்களுக்கு 22 ஆயிரம் பேர் போட்டி போடுகிறார்கள்.

முதல்நிலைத் தேர்வு டி.இ.ஓ. தேர்வு என்பது முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு என இரு நிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடத்தப்படுகிறது. இதிலிருந்து அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு 550 பேர் தேர்வு செய்யப் படுவர். மெயின் தேர்வில் 2 பொதுஅறிவு தாள்களும் (தலா 300 மதிப்பெண்) கொள்குறி வகையிலான கல்வியியல் தாளும் (300 மதிப்பெண்) இடம் பெறும். இறுதியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு, நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் 11 பேருக்கு பணிவாய்ப்புகிடைக்கும்.