scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label TNTET. Show all posts
Showing posts with label TNTET. Show all posts

January 20, 2015

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்.14 வரை பெறலாம்

ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்ரவரி 14 வரை பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தகுதிச் சான்றிதழ்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்தச் சான்றிதழ்களை சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களின் சான்றிதழ்கள் மட்டும், இப்போது அவர்கள் தேர்வு எழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்களை ஏற்கெனவே பதிவிறக்கம் செய்யாத தேர்வர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பிப்ரவரி 14 வரை தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் இந்தச் சான்றிதழ் வழங்கப்படும். சென்னை உயர் நீதின்ற மதுரை கிளையில் அரசு தொடர்ந்துள்ள சீராய்வு மனுவின் மீது பெறப்படும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்று சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாத தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

January 06, 2015

TNTET CERTIFICATE | 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் 19.01.2015 முதல் 14.02.2015 வரை தேர்வு எழுதிய மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு இறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர். சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் தற்பொழுது Print out எடுக்கப்பட்டு, தேர்வர்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தின் அடிப்படையில் தொடர்புடைய அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணியானது 19.01.2015 முதல் 14.02.2015 வரை வழங்கப்பட உள்ளது.

December 22, 2014

CTET: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: சி.பி.எஸ்.இ அறிவிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஜனவரி மாதம் 08-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்படுகிறது.மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள்,அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர்களின் நியமனத்திற்காக சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.இத்தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்வில் பங்கேற்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க வேண்டிய கடைசி தேதி ஜனவரி 8-ம் தேதி ஆகும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஜனவரி 10-ம் தேதி ஆகும்.இத்தேர்வு இரு நிலைகளில் நடத்தப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்குரிய தேர்வு காலை9.30 மணியில் இருந்து 12 மணி வரையும் நடத்தப்பட உள்ளது.ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி இரண்டிலும் ஆசிரியப் பணியாற்ற விரும்புவோர் இருதேர்வுகளையும் எழுத வேண்டும். 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகப் பணியாற்ற விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்களும், தொடக்கக் கல்வியில் இரு ஆண்டுகள் டிப்ளமா படிப்பும் முடித்திருக்க வேண்டும்.8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இரு ஆண்டு தொடக்கக் கல்வி டிப்ளமோ அல்லது பட்டப்படிப்புடன் 50 சதவீத மதிப்பெண்களும் மற்றும் பி.எட். படிப்பும் தகுதியாகும். இடஒதுக்கீடுப் பிரிவில் உள்ளோருக்கு 5 சதவீதம்தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: முதல் தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தாளையும் எழுதுபவர்களுக்கு ரூ.1000. முதல் தாள் மட்டும் எழுதும் SC/ ST/ PH பிரிவினருக்கு ரூ.300, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தாளையும் எழுதுபவர்கள் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் கட்டணம் செலுத்தும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ctet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். இத் தேர்வை எழுத தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கு தயங்குகின்றனர் என்ற செய்திகள் வேதனை அளிப்பதாக உள்ளது. இது தவறான கண்ணோட்டம். இத் தேர்வு மிகவும் தெளிவாகவும் எளிதாக இருக்கும்.இத் தேர்வை நம்பிக்கையுடன் தமிழக ஆசிரியர்கள் எதிர்கொண்டால், எளிதாக தகுதி பெறலாம். தேர்வில் வெற்றி பெற்றால் மத்திய அரசு பள்ளிகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அத்துடன் வெளிநாடுகளில் சென்று பணியாற்றவும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, தமிழகத்தில் இத் தேர்வை நம்பிக்கையுடன் தமிழக ஆசிரியர்கள் எதிர்கொள்ளலாம்.

December 21, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுதோறும் நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, அதிக அளவில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த, எம்.சித்ரா என்பவர், தாக்கல் செய்த மனு:கீழப்பாவூர் அருகில் உள்ள மடத்துாரில், இந்து நடுநிலைப் பள்ளி உள்ளது. இது, அரசு உதவி பெறும் பள்ளி. கடந்த, 2012 ஏப்ரலில், ஆசிரியராக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகிறேன். ஆசிரியர் தகுதி தேர்வில் நான் தேர்ச்சி பெறாததால், என் நியமனத்துக்கு, அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, சம்பளம் இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால், 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்குப் பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, தொடக்க கல்வி துறை உத்தரவிட்டது.ஆசிரியர் நியமனத்துக்கு, குறைந்தபட்ச தகுதியாக, தகுதி தேர்வு தேர்ச்சி என, ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு, நிர்ணயித்துள்ளது. கட்டாய கல்வி சட்டம் அமலுக்கு வந்து, 5 ஆண்டுகளுக்குள், இந்த தகுதியை பெற வேண்டும். எனவே, 5 ஆண்டுகளுக்குள், ஆசிரியர் தகுதி தேர்வில், நான் தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான், என் நியமனத்துக்கு, அரசு ஒப்புதல் வழங்கும். ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், என் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, திண்டிவனத்தில், எம்.டி.கிரேன் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் நாகராஜன் என்பவரும், பணி நியமனத்துக்கு ஒப்புதல் கோரி, மனுத் தாக்கல் செய்தார்.இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்த காலியிடத்தில், மனுதாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, கல்வி தகுதி உள்ளது; ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை.அதனால், அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. சம்பளமும் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு, ஏப்ரலில், விரிவான உத்தரவு ஒன்று பிறப்பித்திருந்தேன்.அரசு உதவி பெறும் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு (ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்), ஐந்து ஆண்டுகளுக்கு, தற்காலிக ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், ஐந்து ஆண்டுகளுக்குள், அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அப்போது இல்லாததாலும், தகுதி பெற்றவர்கள், அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டதாலும், அதை கவனத்தில் கொண்டு, அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, ஏப்ரலில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், ஒருமுறை தான், தகுதி தேர்வு நடந்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில், ஆசிரியர்கள் தேவை அதிகம் உள்ளது. எனவே, எவ்வளவு எண்ணிக்கையில் தகுதி தேர்வு நடத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு நடத்த வேண்டும். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இல்லாத போது, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை, உதவி பெறும் பள்ளிகளில் நியமிப்பதை தவிர, வேறு வழியில்லை. ஆறு வாரங்களுக்குள், மனுதாரர்களுக்கு, தற்காலிக ஒப்புதல் வழங்க, தொடக்க கல்வி இயக்குனருக்கு உத்தரவிடப்படுகிறது. பணியில் நியமிக்கப்பட்ட தேதியில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்குள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால், வேலையை விட்டு தானாக போய் விடுவர்.அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் உள்ள, காலியிடங்களை நிரப்ப ஏதுவாக, ஒரு ஆண்டில், எந்த எண்ணிக்கையில் தகுதி தேர்வு நடத்த முடியுமோ, அந்த அளவுக்கு நடத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

November 03, 2014

TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை நோட்டிஸ் நகல்!!

          5% மதிப்பெண் தளர்வு மூலம் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்றுள்ள திரு பாரதிராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் 5%மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றிபெற்றுள்ளார்.
 தற்போது பாண்டிச்சேரி அரசுவெளியிட்ட SC/ST ஆசிரியர் பட்டியலில் 90க்கு மேல் பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் பணியிடம்நிரப்ப அறிவிப்பு இருந்தது மேலும் 90 க்குமேல் பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெற்றுஇருந்தனர். இதனால் ஆசிரியர் நியமனத்தில்தமிழ் நாடு அரசை பின்பற்றும் பாண்டிச்சேரிஅரசு வெளியிட்ட பட்டியலில் 5%மதிப்பெண் தளர்வுடன் இல்லை. எனவேஇந்த பணியிடங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க கோரியிருந்தார்.

October 30, 2014

TET புதிதாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் பணிநியமனம் நடைபெற உள்ளது- TRB:

TET புதிதாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் பணிநியமனம் நடைபெற உள்ளது. - TRB - Based On TRB Ltr. Dt: 23.10.2014
Name MUTHU RAJ K
Petition No 2014/808052/SF Petition Date 11/10/2014
Address PERIYAKULAM,THENI TAMILNADU .
Grievance To The chairman, TRB.
SUB.Additional BT vacancy
Dear Sir.
1. Any additional vacancy is available in DSE for filling the BT Post in 2013-2015 .
2.Have You release one more list of BT post 2013-2015
Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT
Petition Status Accepted
Concerned Officer
THE SECY,TEACHER RECRUITMENT BOARD
Reply Accepted.
The petitioner is informed that Board already completed the 2011-2013 B.T.recruitment process and we have some BT vacancy and shortly released the list and to fill already passed TET candidate pending for education deportment approval vide letter TRB Rc.No.655/TET/2014 dated 23.10.2014.
BY MuthuRaj K
Periyakulam
Theni.
TET தேர்ச்சி பெற்ற நண்பர்களே முதலைமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல் படி 2011முதல்2013 வரை உள்ள ஆசிரியர் பணியிடங்களில் மீதம் உள்ள பணியிடங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தேர்வர்களை கொண்டு மட்டுமே நிரப்பப்படும் இவை விரைவில் நிரப்பட உள்ளது என முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு TRB அளித்துள்ள தகவல் கூறுகிறது.

October 12, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதென தகவல்

ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில்  60% தேர்ச்சி மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம் பெற்றனர் பிறகு மதுரை உயர்நீதி மன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வுக்கு வழிவகை செய்யும் GO 25 அரசானையை ரத்து செய்தது. இதனை தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் இது வரை எந்த மேல்முறையீடும் செய்யாமல் இருந்தது இது குறித்து மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவர் தமிழக அரசிக்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்தார்.

October 09, 2014

தகுதித் தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள். இந்த மாத இறுதிக்குள் வரலாம் என எதிர்பார்ப்பு??

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வு அறிவிப்பிற்காக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்
தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டிற்கு இதுவரை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வில்லை.இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட்., முடித்த புதிய பட்டதாரிகள் தகுதி தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.
இந்த மாத இறுதிக்குள் வரலாம் என எதிர்பார்ப்பு.

October 05, 2014

TET இரண்டாவது பட்டியலில் இடம் பெற போகிறவர்கள் யார்?

மதுரை நீதிமன்றம் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதே நேரத்தில் மதிப்பெண் தளர்வு மூலம் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களை தொந்தரவு செய்ய கூடாது என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். வரும் காலத்தில் மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருக்காது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். ஒருவேளை தமிழக அரசு மேல்முறையீடு செய்து மதிப்பெண் தளர்வை தக்க வைக்க முயற்சி செய்தால் மட்டுமே மதிப்பெண் தளர்வு நடைமுறையில் இருக்கும். இனி இரண்டாவது பட்டியல் பற்றிய விஷயத்திற்கு வருவோம். ஆதிதிராவிடர் மற்றும் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நோடிபிகேஷன் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டாவது பட்டியலில் இடம் பெற போகிறவர்கள் யார்?

90 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களா?
மதிப்பெண் தளர்வு பெற்று தேர்ச்சி பெற்றவர்களும் இந்த இரண்டாவது பட்டியலில் இடம் பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை நீதிமன்றம் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதால் இந்த இரண்டாவது பட்டியலில் 90 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களே இடம் பெறுவர் என்ற எதிர்பார்ப்பே தற்சமயம் நிலவுகிறது.

இந்த குழப்பத்திற்கு முடிவு ஏற்பட வேண்டும் என்றால் இரண்டாவது பட்டியல் என்று பரவலாக அழைக்கப்படும் ஆதிதிராவிடர் மற்றும் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நோடிபிகேஷன் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வரவேண்டும். அப்போது தான் குழப்பம் நீங்கும்.

செய்தி பகிர்வு : ராப் ராகேஷ்

September 22, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் தள்ளுபடி

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில்... பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது பணி நியமனம் நடைபெறுகிறது.
இந்த வெயிட்டேஜ் முறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெயிட்டேஜ் முறை, 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது. நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குகிறது.

TET வழக்கில் தீர்ப்பு எப்போது?

டெட் பணி நியமன தடை சார்ந்த வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் பக்க வலுவான ஆதாரங்களை இணைத்து தங்கள் வாதக்கருத்துகளை முழுமையாக நேற்று தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் வரும் திங்கள் (22.9.14) அன்று தீர்ப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு அரசுக்கு சாதகமாக வந்தால் உடனடியாக நடந்து முடிந்த பணி நியமன கலந்தாய்வின் அடிப்டையில் பணி நியமனம் நடைபெறும். ஆனால் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் உடனடியாக ”தீர்ப்பு-மீள் ஆய்வு” கோரி மனு செய்யப்பட வாய்ப்பு உண்டு.வெயிட்டேஜ் குறித்த வழக்கில் வெயிட்டேஜ் முறையில் மாற்றம் ஏதேனும் ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தினால், அத்தீர்ப்பின் அடிப்படையில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.”வழக்கின் இறுதி முடிவு எவ்வாறு இருக்கும்?” என அறிந்து கொள்வதற்காக கலந்தாய்வில் பங்கேற்ற தேர்வர்களும், பட்டியலில் இடம்பெறாத தேர்ச்சி பெற்ற தேர்வர்களும் என இரு தரப்புமே மிக ஆவலாக உள்ளனர். பொது மக்களும், கல்வியாளர்களும் மாணவர்களின் கல்வி நலனை காக்கஉடனடியாக பணி நியமனம் நடைபெற வேண்டும் என கருதுகின்றனர்.

September 16, 2014

TET இந்த வார இறுதிக்குள் தீர்ப்பு வருமா?

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் TET குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் 5% தளர்விற்கு எதிரான வழக்கின் வாதங்கள் மட்டுமே நடைபெற்றது. இந்த வாதங்களே கிட்டதட்ட 3 மணிநேரம் நடைபெற்றது.
வாதிகளின் தரப்பில் அனுபவம் வாய்ந்த 4 வழக்குரைஞர்கள் வாதாடினார்கள். அவர்களில் திருமதி.நளினி சிதம்பரம், திரு.சங்கரன். போன்றோர் குறிப்பிடதக்கவர்கள்.

வாதிகளின் வழக்குரைஞர்களாகிய இவர்கள் 5% தளர்வு வழங்கியது தவறில்லை, ஆனால் முன் தேதியிட்டு வழங்கியது தவறென்றும், அரசியல் காரணங்களுக்காக 5% தளர்வு வழங்கப்பட்டதென்றும், SC&ST பிரிவினருக்கு 5% தளர்வு வழங்கியது தவறில்லை ஆனால் BC&MBC பிரிவினருக்கும் சேர்த்து 5% தளர்வு வழங்கியது தவறு. BC&MBC பிரிவினருக்கு 3% மட்டுமே தளர்வு வழங்கியிருக்க வேண்டும் என்றும் இது போன்ற மேலும் சில வாதங்களையும் முன்வைத்தனர்..

அரசு தரப்பில் வாதாடிய AG திரு.சோமையாஜி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சிறப்பு வழக்குரைஞர் திரு.கிரிஷ்ணமூர்தி அவர்களும் தற்போது பின்பற்றப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளும் நீதிமன்றம் பரிந்துரைத்ததன் பேரிலும், நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும்தான் பின்பற்றப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்கள்..

இன்று (16.09.2014) - 5% தளர்வு குறித்த விவாதமும்,G.O 71 குறித்த முழு விவாதமும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இந்த வழக்குகளுக்கான தீர்ப்பும் இந்த வார இறுதிக்குள் வரும் என்றும் நம்பப்படுகிறது.

September 15, 2014

TET வழக்கு விசாரணை நாளை தொடரும்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது.காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.
வாதி தரப்பில் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடினார்.வாதத்தின் போது 5% தளர்வு வழங்கியதில் தவறில்லை.ஆனால் முன்தேதியிட்டுவழங்கியது என்றும் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் வாதாடிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள்.உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்..அரசு தரப்பில் AG திரு.சோமையாஜி அவர்களும்,பள்ளிக்கவித்துறை சிறப்பு வழக்கறிஞர் திரு.கிறிஷ்ணகுமார் அவர்களும் வாதாடினார்கள்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதம் நடைபெற்றது.எதிர்தரப்பு வாதம் முடிந்தது அரசுதரப்பு வாதம் நாளை தொடங்க உள்ளது.

September 14, 2014

வெயிட்டேஜ் முறையில் எப்படி மாற்றம் வரும்?

+2 மதிப்பெண்னுக்கு பதிலாக பதிவுமூப்பு அடிப்படையில் ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண் கொண்டு வரலாம் ஆனால் பணி அனுபவத்துக்கு எந்த மதிப்பெண்ணும் வழங்கப்படுவது சந்தேகம் எனெனில் அவை யார் வேண்டுமானலும் பணிஅனுபவம் உள்ளது போல் சான்றிதழ் தயார் செய்யலாம் அதனால் அவை மறுக்கப்படும் மற்றபடி பட்டம் பட்டயம் பிஎட் டெட் இதற்கு வழக்கம் போல மதிப்பெண் கொடுக்கலாம் அல்லது 50% மதிப்பெண் அடிப்படை 50% பதிவு மூப்பு அடைப்படையில் வரலாம் இல்லை என்றால் கண்டிப்பாக இப்போது இருக்கும் வெயிட்டேஜ் முறை மாற்றம் பெறும் இது உறுதி என்று தகவல் தெரியவந்துள்ளது.

தற்போது தேர்வானவர்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா?????

கண்டிப்பாக ஏற்படாது அவர்களின் பணிநியமனம் மதுரை உயர்நீதிமண்ற கிளையின் இறுதி தீர்ப்பை பொறுத்து அமையும் ஆனால் இந்த தடை உடைக்கப்பட்டால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும் தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதி.

September 13, 2014

TNTET"ஆசிரியர் தகுதிச் சான்றிதழை 22,000 பேர் பதிவிறக்கம் செய்யவில்லை'

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர் இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது தகுதிச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.

மொத்தம் 72,888 பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்தச் சான்றிதழ்களை மூன்று வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியது.

ஆனால், பத்து நாள்களில் 50,276 பேர் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் முதல் முறையாக இணையதளத்திலிருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சான்றிதழ்களை 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். ஒவ்வொரு தேர்வரும் இரண்டு முறை மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

சான்றிதழ்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது தொடர்பாக செயல் விளக்கங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம்.

சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை எனக் கூறி சுமார் 400 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும்.

இதுவரை 22,612 பேர் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை. இவர்கள் அனைவரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.