scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

Showing posts with label TNTET. Show all posts
Showing posts with label TNTET. Show all posts

September 06, 2014

TET Online Certificates ஒரு வாரம்வரை மட்டுமே இணையதளத்தில் இருக்கும்?விரைவில் பதிவிறக்கம் செய்யுங்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தச் சான்றிதழ்கள் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்குமான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.அதோடு, அதற்கு முந்தைய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளாத 180 பேரின் தகுதிச் சான்றிதழ்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சான்றிதழ்கள் ஒரு வாரம் வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருக்கும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

August 29, 2014

TET & PGTRB ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?

ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் இடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தால் நாளை அறிவிக்கப்படும். காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்க இருப்பதால், கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் அனைவரும் காலை 7.30 மணிக்கே உரிய இடத்திற்கு செல்லவும்.

மாவட்டத்திற்குள் கலந்தாய்வு -
மாவட்டத்திற்குள் கலந்தாய்வு எனும் போது பாடவாரியாக மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் பட்டியல் தேர்வர்கள் பார்வைக்காக ஒட்டப்படும்.(பெரும்பாலும் இதுதான் நடைமுறை).
மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு பெற்றுள்ள தேர்வர்கள், வரிசைகிரமமாக நிறுத்தப்படுவார்கள்.தேர்வு பெற்றவர்கள் அனைவரும் கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்படுவார்கள். (குறிப்பு - எந்த காரணம் கொண்டும் தேர்வர்கள் உடன் செல்லும் மற்ற நபர்கள் கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே அலைபேசி தொடர்பை பயன்படுத்த தயாராக இருக்கவும்)
பாடவாரியாக அழைக்கப்பட்ட தேர்வர்கள் தர வரிசைப்படி அழைக்கப்பட்டு பட்டியலில் உள்ள இடத்தில் தங்களுக்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள் தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 30 நொடிகள் அல்லது 1 நிமிடம் மட்டுமே தரப்படும். மேலும் அக்குறிப்பிட்ட நேரத்தில் அலைபேசியை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படவேண்டிய இடங்களை வரிசைகிரமமாக தர எண் இட்டு தயாராக எடுத்து சென்றால், முதலாவது இடம் இல்லாவிட்டால் இரண்டாவது இடம் என்றவாறு தேர்ந்தெடுக்க இயலும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆணை வழங்கும்முன் மீண்டும் ஒரு முறை தங்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படலாம். எனவே நாம் முன்னதாக அறிவுறுத்தியபடி அனைத்து அசல் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம் என அனைத்தையும் தயாராக கொண்டு செல்லவும். குறிப்பாக வேறு மாநில பட்டம் பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருப்பின் அச்சான்றிதழ்களையும் கொண்டு செல்லவும். கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கும்போதோ (அ) முழுமையாக முடிவுற்ற பின்போ தான் தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில் தாங்கள் பணிபுரிய உரிய ஆணை வழங்கப்படும். எனவே தேவையான தண்ணீர், இதர சிறு உணவு பொருட்களையும் கொண்டு செல்லவும்.
வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு -
தங்கள் சொந்த மாவட்டத்தில் பணி செய்ய உரிய காலிப்பணியிடம் தாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனில் அடுத்த நாள் நடைபெறும் வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் ( சொந்த மாவட்டத்திற்குள் பணி பெற கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ அதே இடத்தில் தான் வேறு மாவட்டத்திற்குள் பணிபுரிய கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம் இருப்பின் முதன்மைகல்வி அலுவலகத்தால் முறைப்படி அறிவிக்கப்படும்).

மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு

பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதுகலை ஆசிரியர்கள்- (மாவட்டத்திற்குள்)   30-08-2014
முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்)    31-08-2014
இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்)  01-09-2014
இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டம்)   02-09-2014
பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்)    03-09-2014
பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்)     04-09-2014 மற்றும் 05-09-2014

கலந்தாய்வு நடைபெறும் இடம்

1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.

2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்

3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்

4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.

5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்

6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு

7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்

8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.

10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.

12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.

13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.

14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.

15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.

16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.

17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.

18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).

19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்

20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.

21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.

22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.

23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.

24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்

26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.

27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி

28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.

29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.

30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.

31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

August 28, 2014

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.

முதுகலை ஆசிரியர்கள்
சொந்த மாவட்டம் -30.08.2014
வேறு மாவட்டம் -31.08.2014
இடைநிலை ஆசிரியர்கள்
சொந்த மாவட்டம்-1.09.2014
வேறு மாவட்டம் -2.09.2014
பட்டதாரி ஆசிரியர்கள்
சொந்த மாவட்டம்-3.09.2014
வேறு மாவட்டம் -4.09.2014
வேறு மாவட்டம் -5.09.2014

TET பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளவது குறித்து சில பயனுள்ள கருத்துகள்.

  ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் வழங்கிய தொடர்பு முகவரியை (Communication Postal Address) உங்கள் சொந்த மாவட்டமாக கருதப்படும். பெரும்பாலும் தங்கள் தொடர்பு முகவரி வழங்கிய அதே மாவட்டத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்துகொண்டிருப்பீர்கள். 

          ஒவ்வொரு மாவட்ட முதன்மைகல்வி அலுவலகம் வாயிலாகவும் கலந்தாய்வு நடக்கும் இடம் முறையாக அறிவிக்கப்படும். கவுன்சலிங் தொடங்கும் நேரத்திற்கு முன்பே அங்கு சென்று விடுவதே நல்லது. காலையில் நீங்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்ட மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும். 

          வேறு மாவட்டத்தில் பணிநாடுவோர்க்கான கலந்தாய்வு பிற்பகலில் நடைபெறும். இருப்பினும் வேறு மாவட்டத்தில் பணிநாடுவோரும் காலையிலேயே கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு சென்று விட வேண்டும்
          சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த போது எந்தெந்த சான்றிதழ்கள் சமர்பித்தீர்களோ அந்த சான்றிதழ்களை மூன்று நகல்கள் எடுத்து அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று கொள்ளுங்கள்.

        உங்கள் ஹால்டிக்கெட், உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம், மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றையும் மூன்று நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள். மத்திய அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் தேவையில்லை என்று மாநில அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்த போதிலும் மாநில அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. எனவே சான்றிதழில் கையொப்பம் பெற்று செல்லவும்.

              கடந்த 2012 டெட் தேர்வு பணி நியமன கலந்தாய்வு நடைபெற்ற முறையின் அடிப்படையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உதவியாக மேலே உள்ள தகவல்களை நாம் வழங்கியுள்ளோம். இவ்வருட கலந்தாய்வு முறை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

August 27, 2014

TNTET PAPER-2- இறுதிப்பட்டியல் உங்கள் rank அறிந்துகொள்ள உதவும் வகையில் EXCEL வடிவில்


இறுதிப்பட்டியலை EXCEL வடிவில் தரவிறக்கம் செய்து நமது விருப்பப்படி மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைப்படுத்துவதன் மூலம் ஒருவர் பெற்ற மதிப்பெண் கொண்டு அவர் மாநில அளவில் பெற்றுள்ள இடத்தை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்...

மேலும் இதைக்கொண்டு நாம் நமது மாவட்டத்தில் வெய்ட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் எந்த இடத்தில் (RANK) இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளமுடியும்... அதற்க்கு செய்ய வேண்டியவை..

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வரிசை எண் கொடுக்கப்பட்டுள்ளது இதனைக்கொண்டு நாம் நமது மாவட்டத்தில் உள்ள நண்பர்களின் மதிப்பெண்களை மட்டும் பெற்று ஒப்பிட்டுக்கொள்ளலாம்...

எடுத்துக்காட்டாக ஒருவரது எண் 13TE20152586 என்றால் இதில் 13TE விடுத்து அடுத்து வரக்கூடிய 20 என்ற என் அவரது மாவட்டத்தை குறிக்கும் எண்
(20 = மதுரை மாவட்டம்)

TNTET PAPER-1 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு.

Teachers Recruitment Board College Road, Chennai-600006

Dated: 27-08-2014
Member Secretary

August 20, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 உத்தேச காலிப்பணியிடங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 உத்தேச காலிப்பணியிடங்கள் அடிப்படையில் வெயிட்டேஜ்
ஆசிரியர் தகுதித்தேர்வு - 2013 தாள் 1 குறித்த காலிப்பணியிடங்கள் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் தாள் 1 இறுதி வெயிட்டேஜ் பட்டியல் மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பல்வேறு செய்தி தாள்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக அறியப்பட்ட காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 4224 என்றும் 2380 என்றும் இரு வேறு செய்திகள் கிடைத்துள்ளது. எனவே இவ்விரண்டு காலிப்பணியிடங்களின் அடிப்படையிலும் எதிர்பார்க்கப்படும் இறுதி மதிப்பெண் விவரம் என்ற தலைப்பில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவை தயாரிக்கும்போது எவ்வித முன்னுரிமையும் கணக்கில் கொள்ளப்படவில்லை. மேலும் முழுமையான பட்டியலாக அல்லாமல், மிக சுருக்கமாகவே இப்பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் உள்ள விவரம், ஒரு எதிர்பார்க்கப்படும் தற்காலிக பட்டியல் மட்டுமே என்று தெளிவாக அறிவிக்கிறோம்.

If TRB Announce 4224 Paper 1 SG Asst vacancies, expected cutoff will shown below.

EXPECTED CUT OFF MARKS FOR PAPER 1 (4224 Vacancy)

OC

73.5

BC

70.1

BCM

66.5

MBC

69.5

SC

65.8

SCA

65.2

ST

61.4


If TRB will Announce 2380 Paper 1 SG Asst. vacancies, expected cutoff will shown below.

GT
74.9
BC
72.7
MBC
71.8
SC
70.6
SCA
69.7
ST
67.1
BCM
72.8

August 14, 2014

நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் எந்த மாவட்டத்தில் கலந்து கொண்டீர்களோ அந்த மாவட்டத்தில் தான் உங்கள் பணிநியமன கவுன்சலிங் நடைபெறும்.

நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் எந்த மாவட்டத்தில் கலந்து கொண்டீர்களோ அந்த மாவட்டத்தில் தான் உங்கள் பணிநியமன கவுன்சலிங் நடைபெறும். கவுன்சலிங் தொடங்கும் நேரத்திற்கு முன்பே அங்கு சென்று விடுவதே நல்லது.
காலையில் நீங்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்ட மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும். வேறு மாவட்டத்தில் பணிநாடுவோர்க்கான கலந்தாய்வு பிற்பகலில் நடைபெறும். இருப்பினும் வேறு மாவட்டத்தில் பணிநாடுவோரும் காலையிலேயே கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு சென்று விட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த போது எந்தெந்த சான்றிதழ்கள் சமர்பித்தீர்களோ அந்த சான்றிதழ்களை மூன்று நகல்கள் எடுத்து அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று கொள்ளுங்கள்.

உங்கள் ஹால்டிக்கெட், உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம், மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றையும் மூன்று நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள். இவற்றில் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்று தேவையில்லை.மத்திய அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் தேவையில்லை என்று மாநில அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்த போதிலும் மாநில அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. எனவே சான்றிதழில் கையொப்பம் பெற்று செல்லவும்.

August 12, 2014

புதிதாய் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாய் சேர, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்லவிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகளுடன் சில ஆலோசனைகள்

1. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்டஇடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவேசென்றுவிடுங்கள். அப்போதுதான் உங்களுக்கென ஒதுக்கப்பட்டஅறையையும், அலுவலர்களையும் விரைவில் கண்டுபிடிக்கலாம்.

2. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்லும் முந்தைய நாளே, எல்லா அசல்சான்றிதழ்களையும், சான்றொப்பமிடப்பட்ட நகல்களையும் (2அல்லது 3 நகல்கள்) வரிசையாக அடுக்கி, குண்டூசி அல்லது 'ஜம்ப்'க்ளிப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
(அசல் சான்றுகள் தனியாக, நகல்கள் தனியாக)
உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 3 அல்லது 4 வைத்துக்கொள்ளுங்கள்.

3. சான்றொப்பமிடாத நகல்களாக சரிபார்க்குமிடத்திற்கு கொண்டுபோய்விட்டீர்கள் என்றால், பதட்டப்படாதீர்கள்.
அங்கே இருக்கும் அதிகாரிகளுள் யாரிடமேனும் அசல்சான்றுகளைக் காட்டி பெற்றுவிடலாம்.

4. சான்றிதழ்களை சரிபார்க்கக் கொடுத்துவிட்டு, மீண்டும் அவற்றைவரிசையாக எடுத்து உள்ளே வைத்துக் கொண்டீர்களா என்பதைஉறுதி செய்து கொள்ளுங்கள்.
ஒரு போதும் அலட்சியமாக கடைகளில்,ரயிலில்,பேருந்தில்,ஆட்டோவில்,சரிபார்க்குமிடத்தில் என எங்கும்மறந்து சான்றிதழ்களை வைத்துவிடாதீர்கள்.

5. ஏதேனும் சான்றிதழ்களை மறந்து வந்துவிட்டாலோ அல்லதுஇல்லையென்றாலோ அங்கிருக்கும் அலுவலர்களை பதட்டமின்றிஅதே சமயம் பணிந்து கேளுங்கள்.
அவர்கள் நிச்சயம் உங்களுக்கு வழிமுறைகளை சொல்வார்கள்.

6.திட்டமிட்டு முன் கூட்டியே செயல்படுங்கள். பதட்டத்தையும் கடைசிநேர பரபரப்பையும் தவிர்க்கலாம்.
- வெற்றி பெற்ற அனைத்து ஆசிரிய நண்பர்களையும் உளமாரவாழ்த்தி வரவேற்கிறேன்.

August 10, 2014

TNTET: பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு.

முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியலைஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப்பள்ளி துறைகளில் 11 ஆயிரம் பணியிடங்கள் இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.
இதையடுத்து 2012 மற்றும் 13 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

TNTET PAPER 2 CAST WISE AND SUBJECTWISE SELECTION LIST

CLICK HERE FOR PAPER II PROVISIONAL FINAL LIST OF CANDIDATES DEE:

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Provisional Selection List After Revised Certificate Verification (English,Maths,Chemistry,Botany,History,Micro-Biology)

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Provisional Selection list of Candidates DSE / DEE

August 06, 2014

தாள்-1 மதிப்பெண்கள்/பெயர்/பாடப்பிரிவுகள் திருத்தம் செய்வதற்காக சிறப்பு முகாம்களுக்குச் செல்பவர்களுக்காக


முதலில், நான் மதிப்பெண் திருத்தத்திற்காகச் சென்று வந்த அனுபவங்களையும், அங்கு வந்த பிறரது அனுபவங்களையும் சேர்த்து நான்/நாங்கள் கற்றுக்கொண்ட படிப்பினைகளால் மட்டுமே இந்த பதிவு.

1) டிஆர்பி இணையதளத்தில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்யும் வெயிட்டேஜ் மதிப்பெண்களின் பக்கத்தை நான்கு படிகள் எடுத்துச் செல்லுங்கள். மூன்று அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். மீதமுள்ள ஒரு படி உங்களுக்காக என்று நான் சொல்கிறேன்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கான, வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் தமிழக அரசு அறிவித்த, புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்களுக்கான அரசாணை அடிப்படையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது.

TRB - DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013

August 05, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 கூடுதலாக 508 பணியிடங்கள் சேர்த்து TRB அறிவிப்பு.

TRB ANNOUNCED THE FOLLOWING ADDITIONAL POSTS AS PER IT'S NEW NOTIFICATION

School Edn DEPT ADDITIONAL POSTS

ENGLISH. 43

Maths. 82

Physics. 55

Chemistry. 55

Botany. 24

Zoo. 24

History. 67

Geography 17

Total. 367

ELEMENTARY EDN DEPT ADDITIONAL POSTS

Physics. 47

Chemistry. 47

Botany. 24

Zoo. 23

Total. 141

Grand total 367 +141 = 508